Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"சரீரம்" திரைவிமர்சனம்!

Advertiesment
sareeram

Web Desk

, செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (19:51 IST)

ஜி.வி.பி பிக்சர்ஸ்,சார்பில் இயக்குனர் ஜி.வி.பெருமாள் எழுதி,இயக்கி தயாரித்துள்ள திரைப்படம்  "சரீரம்"

 

இத் திரைப்படத்தில்  தர்ஷன், சார்மி   ஜெ.மனோஜ்,பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இதில் அறிமுக நடிகர்களாக தர்ஷன், சார்மி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

சரீரம் என்பது நம் உடலைக் குறிக்கும். அந்த சரீரமான நம் உடலை மாற்றிக்கொள்ளும் உரிமை யாருக்கும் இல்லை என்பதே  இத்திரைப்படத்தின் ஆழமான கருத்தாகும்.

 

ஒரு காதல் ஜோடியினர்க்கு அவர்களது குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்கிறது. காதலர்கள் வாழ வழி தெரியாமல், தன்  காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும்  தங்கள் பாலினத்தையே மாற்றிக் கொள்கிறார்கள். 

 

அந்த காதல் ஜோடியை இந்த குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டதா? இல்லை இந்த உலகம் தான் ஏற்றுக் கொண்டதா? இவர்களது காதல் ஜெயித்ததா? என்பது தான் சரீரம் படத்தின் மீதி கதை.

 

இந்த மாதிரி ஒரு திரைப்படம் கற்பனைக்கு எட்டாத கதாபாத்திரமாகவும்,பார்வையாளர்களை முட்டாளாக நினைத்து எழுதி உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜி.வி.பெருமாள்,

 

பார்வையாளர்களை முட்டாளாக்கியதும் இல்லாமல் சினிமா வாய்ப்புக்காக தேடி வந்த புதுமுக நடிகர்களையும் தனது அர்த்தமற்ற கதையால் பலிகடா  ஆக்கிவிட்டார் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜி.வி.பெருமாள்.

 

மொத்தத்தில் "சரீரம்".........Fill in the blank


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்பைடர்மேன் ஷூட்டிங்கில் விபத்து! மருத்துவமனையில் டாம் ஹாலண்ட்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!