Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சபரிமலைக்கு இந்த வாகனங்களில் வரக்கூடாது? – கேரள அரசு விதித்த தடை!

சபரிமலைக்கு இந்த வாகனங்களில் வரக்கூடாது? – கேரள அரசு விதித்த தடை!
, வெள்ளி, 28 அக்டோபர் 2022 (08:23 IST)
ஆண்டுதோறும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில் குறிப்பிட்ட சில வாகனங்களில் பக்தர்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய செல்கின்றனர். டிசம்பர் மாதத்தில் மகரஜோதி சமயத்தில் ஏராளமானோர் மாலை போட்டு செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விபத்துகளை தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சரக்கு வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோவில் பக்தர்கள் சபரிமலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


சபரிமலை சீசனையொட்டி நிலக்கல் – பம்பை இடையே தினசரி 200 பேருந்துகளும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 பேருந்துகளும் இயக்கப்படும். மகரஜோதி நாளில் 1000 பேருந்துகள் இயக்கப்படும் என கேரள போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதுதவிர பிற மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் குழு குறைந்தது 40 நபர்களாவது கோரினால் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பர் 1ம் தேதி, விசிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு!