Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் டிரோன்களை பறக்கவிட தடை: காவல்துறை எச்சரிக்கை

Advertiesment
drone
, வியாழன், 27 அக்டோபர் 2022 (20:57 IST)
சென்னையில் டிரோன்களை பறக்கவிட தடை என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையின் முக்கிய பகுதிகளான தலைமைச்செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள் ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் டிரோன்களை பறக்க விடக்கூடாது என்றும் அவ்வாறு அனுமதி இன்றி டிரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
திருமணம், கோவில் திருவிழா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போது காவல்துறையின் அனுமதி பெற்ற பின்னரே டிரோன்களை இயக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அனுமதி இல்லாமல் எந்த காரணத்தை முன்னிட்டும் டிரோன்களை இயக்கக் கூடாது என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் காவலரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது!