சுத்தம் சோறு போடும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில் சுத்தமாக இருந்தாலே பாதி நோய்கள் நம்மை அண்டாது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் சிறுவயதிலிருந்தே கைகளை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்பதை நாம் பழகிக் கொண்டால் எதிர்காலத்தில் நமக்கு எந்தவிதமான நோயும் வராது என்பது குறிப்பிடத்தக்கது
குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்க்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்கள் குளியலறை கழிவறை உள்ளிட்ட பொது இடங்களில் பயன்படுத்தும் போது எளிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். எனவே அவர்கள் அடிக்கடி கைகழுவ வேண்டும்.
சிறு வயதில் உள்ளவர்கள் கண்டிப்பாக அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அதேபோல் கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் நன்றாக சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். இதனால் கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி அவர்கள் வயிற்றில் உள்ள குழந்தையும் பாதுகாக்கப்படும்
வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக கைகள் மற்றும் கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். இதன் மூலம் வெளியிலிருந்து எந்த விதமான வைரஸ் நோயும் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு பரவாது என்பது குறிப்பிடத்தக்கது
கை கழுவுவது தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளிடம் சிறுவயதிலிருந்தே ஏற்படுத்த வேண்டும். அதேபோல் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கை கழுவ அவ்வபோது சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது