டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு பதிலாக வேறு நபர்களை பணி புரிய வைத்து விட்டு வெளியே சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் ஆய்வின்போது டாஸ்மாக் பணியாளர்கள் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆய்வின்போது ஊழியர்கள் கடைகளில் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பதிலாக வேறு நபர்கள் பணியாற்றுவதாக வந்த புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது
மேலும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அல்லது வங்கிகளுக்கு செல்லும் போது உரிய அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்
ஊழியர்கள் தங்களுக்கு பதிலாக போலியான ஒரு நபரை வைத்து விட்டு வெளியே சென்று கொள்வதாக கூறப்படும் புகாருக்கு டாஸ்மாக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது