Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?

eyes
, வியாழன், 1 டிசம்பர் 2022 (21:22 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருவதாகவும் இதனை அடுத்து சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து இந்நோயை கட்டுப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் மெட்ராஸ் ஐ வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தகவல்களை தற்போது பார்ப்போம். மெட்ராஸ் ஐ வந்தால் கண்கள் சிவப்பு நிறமாக மாறும் என்றும் கண்களில் இருந்து நீர் வடியும் என்றும், கண்களில் லேசாக எரிச்சல் மற்றும் உறுத்தல் இருப்பதே அதன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் மெட்ராஸ் ஐ நோய் வந்தவர்கள் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக சோப்பு நீரில் கழுவினால் நல்லது. மேலும் கைகளை சானிடைசர் பயன்படுத்தி கழுவினால் இன்னும் நல்லது.
 
மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாமல் இருக்கும்
 
அதே போல் மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டவர் தொடும் பொருட்களை மற்றவர்கள் தொடாமல் இருக்க வேண்டும்
 
மேலும் கண்களை கைகளால் தொடவோ கசக்கவோ கூடாது என்பது முக்கியமான ஒரு அம்சம் ஆகும் . மேலும் மெட்ராஸ் ஐ நோயின் பாதிப்பு மூன்று நாள்களுக்கு மேல் பாதித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடதக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 291 பேர் பாதிப்பு; இருவர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!