Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.200 உயர்வு..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.200 உயர்வு..!

Siva

, புதன், 21 பிப்ரவரி 2024 (10:25 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5,810 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 46,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,280 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50,240 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 77.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்..! ராகுல் காந்தி இரங்கல்.!!