Publish Date: Thu, 11 Jan 2024 (11:16 IST)
Updated Date: Thu, 11 Jan 2024 (11:19 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்றும் இன்றும் பங்குச்சந்தை உயர்த்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்றம் கண்டு வருகிறது என்பதும் சற்று முன் சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 771 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 37 புள்ளிகள் உயர்ந்து 21656 என்ற புள்ளிகளில் வர்த்தகமாய் வருகிறது. இன்றைய பங்கு சந்தை வர்த்தகத்தில் சிப்லா, ஃபார்மா பீஸ், ஐடி பீஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, கோல்ட் பீஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.