திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நலிவுற்ற கலைஞர்கள் சார்பாக பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் தலைமையில் நினைவஞ்சலி கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரைப்படக் கலைஞர்கள் திரைப்பட நடிகர்கள் போல் வேடம் அணிந்து திருப்பரங்குன்றம் பகுதியில் அமைதி ஊர்வலமாக வந்து விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் விஜயகாந்த் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி அவரது நினைவாக நாழிவுற்ற கலைஞர்களுக்கு கேப்டன் விருதுகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் மதுரை முத்து செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது:
இளநீரைப் போன்ற தூய்மையானவர் நல்ல நடிகர் என்பதைவிட நல்ல மனிதர் வீட்டில் ஒருவர் இறந்ததாக நினைத்து எல்லோரும் வருத்தப்படுகிறார்கள் என்றால் அது கேப்டனாக தான் இருக்கும்.
சாமிக்கு மாலை அணிந்தவர்கள் கூட மாலையை கழட்டினார்கள் அது வீட்டில் ஒருவர் இறந்தால் தான் அப்படி கழட்டுவார்கள் அந்த அளவுக்கு வீட்டில் ஒரு வராக நினைத்து மக்கள் நினைக்கின்றனர் அடுத்த தலைமுறைக்கு அன்னதானம் வழங்கும் என்ற நேர்மையானவர் மதுரையில் பிறந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமை அவருக்காக ஒரு அஞ்சலி கூட்டம் பேரணியாக நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல் விருது கூட அவர் பெயரை வைத்துக் கொடுத்தால் அவர் எப்போதும் நம்முடன் பயணிக்கின்ற நினைவிருக்கும். கேப்டன் விருது முதன் முதலில் மதுரையில் கொடுத்திருக்கிறோம் இனிய இது போன்ற நலத்திட்டங்கள் பல பண்ணுவோம்
விஜயகாந்த் மறைவிற்கு வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீசி கொடுத்த கேள்விக்கு:
அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை அல்லது ஜோடித்தார்களா என்று தெரியவில்லை அது தவறான விஷயம் இரங்களுக்காக வந்தவர் விஜயகாந்த் மறைவிடத்தில் அவ்வளவு நேரம் நின்று வருந்தி விட்டுப் போனார் அந்த இடத்தில் அது செய்திருக்கக் கூடாது.
அவரது பெயரை தமிழக அரசு சார்பாக ஏதேனும் நினைவிடத்தில் பெயர் வைப்பதற்கு கோரிக்கை வைப்பீர்களா என்ற கேள்விக்கு:
நடிகர் சங்கத்துக்கு பெயர் வைப்பது ஒரு பக்கம் எங்கே அவர் பெயர் வைத்தாலும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் சில தலைவருக்கு வைத்தால் இன்னொரு கட்சிக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் இவரைப் பொறுத்தவரை எல்லாரும் ஏத்திக்கிட்டவர்கள் எந்த வருடத்திற்கும் நிர்வாகத்திற்கும் இவரது பெயரை வைத்தால் யாரும் தடுக்க மாட்டார்கள்
நடிகர் விஷால் நடிகர் சங்கத்திற்கு முதலில் கலைஞர் பெயர் வைப்பதாகவும் இப்போது விஜயகாந்த் பெயர் வைப்பதாகவும் மாற்றி மாற்றி கூறுகிறார் என்ற கேள்விக்கு:
நடிகர் சங்கம் சார்பாக மலேசியா கூட்டம் நடந்ததெல்லாம் மிகப்பெரிய விஷயம் அந்த காலத்திலே பெரிய தொகையை கடன் வைத்தது அவருடைய காலத்தில் தான் முடிந்தது நான் அவருடைய ரசிகரோ கட்சி காரணம் அல்ல நம் மண்ணின் ரசிகனாக அவர் மீது பாசம் வைத்துள்ளேன் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னே நடிகராக தன் சொந்த பணத்தில் அவ்வளவு நல்லது செய்த தூய மனிதர் எல்லா இடத்திற்கும் பெயர் வைக்கலாம் பொருந்தும் எல்லோரும் வரவேற்பார்கள்.
பொதுவாக மதுரையில் வைக்க வேண்டும் முதலாக நான் வேண்டுகோள் வைக்கிறேன் மதுரையில் அழகான பெரிய சிலை ஒன்று வைக்க வேண்டும் அனைவரும் சந்தோஷப்படுவார்கள் இங்கிருந்து வயதானவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சொல்ல முடியாது அதனால் அங்கு சென்று ஒரு ஆறுதல் அடைவார்கள் அதனால் மதுரையில் சிலை வைப்பது வரையறுக்கத்தக்கது என்று தெரிவித்தார்.