Publish Date: Wed, 10 Jan 2024 (10:40 IST)
Updated Date: Wed, 10 Jan 2024 (10:42 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 49 புள்ளிகள் அதிகரித்து 71,432 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 7 புள்ளிகள் அதிகரித்து 21 552 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்று பங்கு சந்தை மிகக் குறைந்த அளவே உயர்ந்திருந்தாலும் இன்னும் சில மணி நேரங்களில் அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாகவும் இனிவரும் நாட்களிலும் பங்குச்சந்தை அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் சிப்லா, ஃபார்மா பீஸ், ஐடி பீஸ், ஆகியவை உயர்ந்துள்ளதாகவும் மணப்புரம் கோல்டு, டிஎம்பி பேங்க், கோல்ட் பீஸ், சவுத் இந்தியன் வங்கி ஆகியவை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.