பங்குச்சந்தை நேற்றும் நேற்று முன்தினமும் ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 20 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து 83 ஆயிரத்து 100 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி இரண்டு புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரம் 419 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
சென்செக்ஸ் மற்றும் நிப்டி மிகவும் குறைந்த புள்ளிகளில் ஏற்றத்தில் இருப்பதால் இன்று மாலைக்குள் இறங்கவும் வாய்ப்பு இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தானி லீவர், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், எச்.சி.எல் டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், கோடக் மகேந்திரா வங்கி, சன் பார்மா, டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.