இந்திய பங்குச்சந்தை கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் சரிவாக இன்று சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறைந்துள்ளது.
இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 15 புள்ளிகள் குறைந்து 60 ஆயிரத்து 890 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 52 புள்ளிகள் குறைந்து 18,113 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இன்னும் சில காலத்துக்கு இருக்கும் என்றும் எனவே நிதானமாக பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
பட்ஜெட் நெருங்க நெருங்க பங்குச்சந்தை குறைய வாய்ப்பிருப்பதாகவும் பட்ஜெட்டுக்கு பின் பங்குச்சந்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது