Publish Date: Wed, 18 Jan 2023 (09:59 IST)
Updated Date: Wed, 18 Jan 2023 (10:01 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் வரும் நிலையில் நேற்று கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 100 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 205 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 865 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 18,112 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிப்டி 18000க்கு மேலும், சென்செக்ஸ் 60 ஆயிரத்துக்கு மேலும் விற்பனையாகி வருவது பங்குச்சந்தை பாசிட்டிவ்வை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.