Publish Date: Mon, 23 Jan 2023 (09:47 IST)
Updated Date: Mon, 23 Jan 2023 (09:49 IST)
வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் பங்குச்சந்தை இன்று திடீரென சுமார் 400 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 415 புள்ளிகள் உயர்ந்து 61,035என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 112 புள்ளிகள் 18139 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.