Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 நாட்களில் தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை!.. டுடே அப்டேட்!..

Advertiesment
gold

Mahendran

, சனி, 24 ஜனவரி 2026 (11:24 IST)
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகிறது. இனிமேல் நம்மால் தங்கத்தை வாங்க முடியுமா என்கிற கேள்வியை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வர்க்க மக்களின் மனதில் உருவாக்கியிருக்கிறது தங்கத்தின் விலை. குறிப்பாக கடந்த 16ஆம் தேதியிலிருந்து தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தருகிறது. கடந்த 21ம் தேதி ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியபோது பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதற்கு மேலும் தொடர்ந்து எகிறி வந்தது. அதேநேரம் நேற்று முன்தினம் சவரனுக்கு 1720 சரிந்து ஆறுதல் தந்தது. ஆனால், நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 3,600 அதிகரித்தது. ஒரு கிராமுக்கு 450 உயர்ந்து
நேற்று ஒரு சவரத்தின் விலை ஒரு லட்சத்து 17,200 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில்தான் இன்றும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 உயர்ந்து ஒரு சவரன் 1,16,960 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சவரன் 14,620க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களாக தங்கத்தின் விலை:

24ம் தேதி - சவரன் - ரூ.1,16,960
23ம் தேதி - சவரன் - ரூ.1,16,400
22ம் தேதி - சவரன் - ரூ.1,13,600
21ம் தேதி - சவரன் - ரூ.1,15,300
20ம் தேதி - சவரன் - ரூ.1,11,200
19ம் தேதி - சவரன் - ரூ.1,07,600

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரெஸ் போடுவதில் நேரம் வேஸ்ட் பண்ணாத மார்க் சக்கர்பெர்க்!.. வெற்றியின் சீக்ரெட்!....