Publish Date: Thu, 07 Nov 2024 (09:49 IST)
Updated Date: Thu, 07 Nov 2024 (09:50 IST)
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 1300 ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமத்தை 165 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1320 ரூபாயும் குறைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ரூபாய் 7,200 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 1320 குறைந்து ரூபாய் 57,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7705 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 102.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 102,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது