தங்கம் விலை மீண்டும் சரிவு.. ஒரே நாளில் 200 ரூபாய் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (11:22 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக ஒரே விலையில் இருந்த தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய்   7,095 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 குறைந்து ரூபாய்  56,760 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,550  எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,400 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments