Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து மழை பெய்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியால் பாதிப்பு இருக்காது-எரிக்கு நீர்வரத்து குறைவாக வருவதாக அதிகாரிகள் தகவல்!

தொடர்ந்து மழை பெய்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியால் பாதிப்பு இருக்காது-எரிக்கு நீர்வரத்து குறைவாக வருவதாக அதிகாரிகள் தகவல்!

J.Durai

, செவ்வாய், 15 அக்டோபர் 2024 (09:53 IST)
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடியது செம்பரம்பாக்கம் ஏரி இந்த ஏரியிலிருந்து தினம் தோறும் சென்னை மக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு செய்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் மொத்தம் 24 அடியில் தற்போது 13.23 அடியும், மொத்த கொள்ளளவில் 3645 மில்லியன் கன அடியில், 1223 மில்லியன் கனடியும், நீர்வரத்து 260 கனஅடியாகவும், நீர் வெளியேற்றும் 134 கன அடியாகவும் உள்ளது. தொடர்ந்து கன மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது இரண்டு தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்த அளவே வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் செம்பரம்பாக்கம் ஏரியில் 23 அடி வந்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம் தற்போது ஏரியின் நீர்மட்டம் 13 அடி மட்டுமே உள்ள நிலையில் இன்னும் ஏரி நிரம்ப 10 அடி தேவைப்படும் என்பதால் தொடர்ந்து மழை பொழிந்தாலும் முழு கொள்ளளவை எட்டாது எனவும் அவ்வாறு எட்டினாலும் அனையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் அதிக அளவில் திறக்க வாய்ப்பு இல்லை எனவும் மழையை பொறுத்தும் ஏரியின் நீர்மட்டம் உயர்வை பொறுத்தே தேவைக்கேற்ப உபரி நீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் இந்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னை மக்களுக்கு எந்த வித பாதிப்பும் வராது எனவும் உபரி நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும்
பொதுப்பனி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
எப்போது மழை பொழிந்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியால் பாதிப்பு ஏற்படும் என சென்னை மக்கள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருப்பது சென்னை மக்களை சற்று நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாகை இலங்கை காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக இரண்டு நாட்கள் ரத்து-கப்பல் நிர்வாகம் அறிவிப்பு!