Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க,ஸ்டாலின், விஜய்!

Advertiesment
PM Modi Birthday

Prasanth Karthick

, செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (09:16 IST)

இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், த.வெ.க கட்சி தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

 

 

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரேந்திர மோடி இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தமிழக பாஜகவினர் சில பகுதிகளில் அன்னதானம் உள்ளிட்டவற்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

 

இந்நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “மாண்புமிகு பிரதமர் திரு அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் வருடங்களில் நீடித்த ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்” என வாழ்த்தியுள்ளார்.
 

 

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பதிவிட்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் “மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்