Publish Date: Mon, 09 Sep 2024 (10:58 IST)
Updated Date: Mon, 09 Sep 2024 (11:00 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று எந்த விதமான மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களும் தங்கம் ஒரே விலையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படும் நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 6680 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 53,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,135 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது