Publish Date: Wed, 19 Jun 2024 (11:58 IST)
Updated Date: Wed, 19 Jun 2024 (11:59 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை என்பதும் குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு கிராம் தங்கம் 6,630என்ற விற்பனையான நிலையில் தற்போது 6,690 விலையில் தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 6,690 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40குறைந்து ரூபாய் 53,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,160 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 95.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 95,600.00எனவும் விற்பனையாகி வருகிறது