Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான பொருட்கள் வைக்கும் அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை!

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான பொருட்கள் வைக்கும் அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை!

J.Durai

கோயம்புத்தூர் , சனி, 15 ஜூன் 2024 (10:13 IST)
கோவை மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது குறிப்பாக யானைகள் நடமாட்டம் என்பது மற்ற விலங்கினத்தை விட சற்று அதிகமாகவே உள்ளது.
 
மலைப்பகுதியில் இருக்கும் இந்த யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மலையோரம் உள்ள கிராமங்களில் உணவுக்காக வருவது வாடிக்கையாக உள்ளது.
 
இந்நிலையில் கடந்த வாரம் நெல்லூர்வயல் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை 5க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி வீடுகளுக்குள் இருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு சென்றது. 
 
இதனிடையே நேற்று இரவு அதே ஒற்றை யானை பூண்டி வெள்ளியங்கிரி மலை கோவில் அடிவாரத்தில் உள்ள அன்னதான பொருட்கள் வைக்கும் அறைக்குள் புகுந்தது.
 
பின்னர் அங்குள்ள அரிசி பருப்பு மூட்டைகளை சாப்பிட்டு கொண்டுள்ளது. விட்டு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அறைக்குள் இருந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் வாழைப்பழத்தை போட்டு அறையில் இருந்து வெளியே வரவழைத்தனர்.பின்னர் அந்த யானை வனத்திற்குள் சென்றது. 
 
உணவுக்காக அன்னதான பொருட்கள் வைக்கும் அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை நீண்ட நேரமாக வெளியில் வராமல் வனத்துறைக்கு போக்கு காட்டிய  வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று திமுக முப்பெரும் விழா..! கோவையில் பிரம்மாண்ட ஏற்பாடு..!!