Publish Date: Mon, 17 Jun 2024 (11:14 IST)
Updated Date: Mon, 17 Jun 2024 (11:17 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதாக வெளியான தகவல் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 6,690 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 53,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,160 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 95.60எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 95,600.00எனவும் விற்பனையாகி வருகிறது