Publish Date: Sat, 01 Apr 2023 (10:29 IST)
Updated Date: Sat, 01 Apr 2023 (10:31 IST)
நேத்து ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 200 ரூபாய் ஏறிய நிலையில் இன்று 240 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் சரிந்து ரூபாய் 5560.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து ரூபாய் 44480.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6014.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48112.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 77.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77700.00 எனவும் விற்பனையாகி வருகிறது