சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளின் போராட்டம் சற்றுமுன் வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் நான்கு பேர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக அந்த கல்லூரியின் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இதுகுறித்து இன்று சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், மாணவிகலிடம் அத்துமீறல்களில் ஈடுபட்டிருந்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதனை மகளிர் ஆணைய தலைவர் குமாரி அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து கல்லூரி மாணவிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்