நேற்றைய தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து புதிய உச்சத்திற்கு சென்ற நிலையில் இன்று தங்கம் விலை  குறைந்துள்ளதாக தகவல் வெளியானது. நேற்று ஒரு கிராம் 8300 இன்று 80 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் ஒரு சவர 640 ரூபாய் குறைந்துள்ளது. இந்த நிலையில்  சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,300 என விற்பனையான நிலையில் இன்று ரூ.80 குறைந்து 8,220என விற்பனையாகிறது. அதேபோல் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.66,400 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று ரூ.640 குறைந்து 65,760 என விற்பனையாகியுள்ளது.
 
									
										
			        							
								
																	
	 
	அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.8967  என்றும், 8 கிராம் ரூ.71,736என்றும் விற்பனையாகி வருகிறது.
 
									
											
									
			        							
								
																	
	 
	நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.112 என விற்பனையான நிலையில், இன்று அதே விலையிலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.112,000 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	தங்கம் விலை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த நேரத்தில் முதலீட்டுக்கு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என பொருளாதார ஆலோசகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.