தங்கம் விலை இன்று காலை ஒரு கிராம் 110 ரூபாயும், ஒரு சவரன் 880 ரூபாயும் உயர்ந்த நிலையில், ஒரு சவரன் 65,840 ரூபாயாக விற்பனையானது.
ஆனால் தற்போது, திடீரென இரண்டாவது முறையாக இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, ஒரு கிராம் 8,300 ரூபாயாகவும், ஒரு சவரன் 66,400 ரூபாயாகவும் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்துள்ளது. பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டே வரும் நிலையில், அதில் உள்ள முதலீடுகளை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று ஒரே நாளில் 1,440 ரூபாய்வரை தங்கம் விலை உயர்ந்திருப்பது, தங்க நகை வாங்குவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.