தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்திற்கு சென்றுள்ளதாகவும் ஒரு சவரன் விலை 65 ஆயிரத்து நெருங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 45 ரூபாயும் ஒரு சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,065 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 360 உயர்ந்து ரூபாய் 64,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,798 எனவும் ஒரு சவரன் ரூபாய் 70,384 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 109.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 109,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது