பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Siva
வியாழன், 20 நவம்பர் 2025 (09:49 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று 115 புள்ளிகள் உயர்ந்து 85 ஆயிரத்து 296 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 26 ஆயிரத்து 89 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்பலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், இன்டிகோ, ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகளின் நிலை உயர்ந்துள்ளது. 
 
அதேபோல் ஆசியன் பெயிண்ட், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல் டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், மாருதி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்சலுக்கு என்று முதல்முறையாக தனி ரயில்.. சென்னை - மங்களூரு இடையே முதல் ரயில்..!

மகனை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர பெற்ற தாயே கூறினாரா? லிவ்-இன் துணைவர் தூண்டுதலா?

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments