பங்குச்சந்தை நேற்று ஆரம்பத்தில் லேசான சரிவுடன் வர்த்தகம் தொடங்கினாலும், திடீரென மிக மோசமாக சரிந்தது. சென்செக்ஸ் சுமார் 1200 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று திடீரென சரிந்த பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சற்றுமுன் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 335 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 377 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 104 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 17 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹச் சி எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. இன்போசிஸ், ஐடிசி, பவர் கிரேட், டிசிஎஸ் டெக், மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.