பங்குச்சந்தையின் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 2000 புள்ளிகளுக்கு அதிகமான ஏற்றம் கண்ட நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கும் நிலையில், இன்றைய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம். இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சில நிமிடங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்ந்து 80395 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், தேசிய பங்கு சந்தை நிஃப்டி 95 புள்ளிகள் உயர்ந்து 24,003 இந்த புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி, வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், கோடக் மகேந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.