அதானி விவகாரம் உள்பட ஒரு சில காரணங்களால் கடந்த சில நாட்களில் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்து 80,195 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி வெறும் 3 புள்ளிகள் மட்டுமே சரிந்து 24,202 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டுமே மிகவும் குறைந்த அளவில் சரிந்துள்ளதால், பங்குச்சந்தை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லிவர், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, பங்குச்சந்தை இனி மேலும் அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.