பங்குச்சந்தை நேற்றும் நேற்று முன்தினமும் உயர்ந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில், இந்த வாரமும் உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து சென்செக்ஸ் 81 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே உயர்ந்து வரும் நிலையில், சற்றுமுன் 345 புள்ளிகள் உயர்ந்து 81,1600 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை 85 புள்ளிகள் உயர்ந்து 24,520 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்போசிஸ், ஐடிசி போன்ற பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், ஹெச்.சி.எல் டெக்னாலஜி, பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva