கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருப்பதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால், சத்தமே இல்லாமல் தங்கத்தை விட மிக வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது என்பதை பலர் கவனிக்கத் தவறிவிட்டனர்.
வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு ரூ. 9,000 உயர்ந்து, ரூ. 2,06,000 என்ற உச்ச விலையில் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 206க்கு விற்பனை ஆகி வருகிறது. வெள்ளியின் சரித்திரத்திலேயே ஒரு கிலோ இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனையாவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 5-ஆம் தேதி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 1,65,000 என்று இருந்த நிலையில், தற்போது பத்தே நாட்களில் கிட்டத்தட்ட ரூ. 40,000 உயர்ந்துள்ளது. தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைத்து வருவதாகவும் வெள்ளி விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் வெள்ளியின் விலை மிக வேகமாக உயரும் என்றும், ஒரு சில மாதங்களில் ஒரு கிலோ மூன்று லட்ச ரூபாயை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.