நேற்று வாரத்தின் முதல் நாளான பங்குச்சந்தை ஏற்றம் கொண்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக அதானி விவகாரம் பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று ஓரளவுக்கு பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 270 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 115 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 83 புள்ளிகள் உயர்ந்து 17,717 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இந்த வாரத்தின் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக பங்கு சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தாலும் வரும் நாட்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் முதலீட்டு ஆலோசர்கள் அறிவுரையை பெற்று முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது..