பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்றைய வாரத்தின் முதல் நாளில் திடீரென சுமார் 700 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சற்றுமுன் பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகள் குறைந்து 57 ஆயிரத்து 500 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 210 புள்ளிகள் குறைந்து 17100 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த வாரம் ஓரளவு சென்சஸ் உயர்ந்தால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தங்கள் நஷ்டத்தை ஈடுகட்டிய நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது