Publish Date: Fri, 09 Jun 2023 (10:45 IST)
Updated Date: Fri, 09 Jun 2023 (10:47 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதும் சமீபத்தில் சென்செக்ஸ் 63 ஆயிரத்தை தாண்டியது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தை சற்று சரிந்து உள்ளது. இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 35 புள்ளிகள் சார்ந்து 62,810 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி வெறும் 7 புள்ளிகள் மட்டுமே சார்ந்து 18,675 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
பங்குச்சந்தை இன்று காலை லேசாக சரிந்தாலும் மதியத்திற்கு பின்னர் உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்