Publish Date: Thu, 08 Jun 2023 (10:57 IST)
Updated Date: Thu, 08 Jun 2023 (10:59 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் லாபம் அடைந்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து சென்செக்ஸ் உச்சம் பெற்று உள்ளது. இன்று மும்பை பங்கு சந்தை சென்செட் 140 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 292 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 18,768 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதே ரீதியில் பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே சென்றால் சென்செக்ஸ் விரைவில் 65 ஆயிரத்தை தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.