பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர் சரிவில் இருந்து வரும் நிலையில் முதலீடு செய்தவர்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று பங்குச்சந்தை காலையில் சரிந்தாலும் மாலையில் ஓரளவு உயர்ந்து முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் சரிவில் தான் உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 190 புள்ளிகள் சார்ந்து 65 ஆயிரத்து 349 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 61 புள்ளிகள் கூறும் சரிந்து 19,404 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இனிவரும் காலங்களில் பங்குச்சந்தை ஏற்ற ஏற்பாடு தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.