பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டே வந்திருக்கும் நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 91 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரத்து 314 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 44 புள்ளிகள் சார்ந்து 19,391 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
பங்குச்சந்தை தொடர் சரிவில் இருந்து வருவது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் பங்குச் சந்தை விரைவில் மீண்டு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.