Publish Date: Thu, 10 Aug 2023 (11:02 IST)
Updated Date: Thu, 10 Aug 2023 (11:03 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டே வரும் நிலையில் இன்று மீண்டும் சுமார் 300 புள்ளிகள் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 329 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரத்து 660 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 90 புள்ளிகள் சரிந்து 19,545 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்த வாரம் தொடர் சரிவில் பங்கு சந்தை இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் புதிதாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்ற முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.