Publish Date: Thu, 28 Sep 2023 (11:08 IST)
Updated Date: Thu, 28 Sep 2023 (11:09 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் இறக்கமே அதிகம் இருப்பதால் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிந்து 66033 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 25 புள்ளிகள் சரிந்து 19693 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
தினந்தோறும் பங்குச்சந்தை சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் கடும் அச்சத்தில் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தை உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.