Publish Date: Mon, 18 Sep 2023 (10:11 IST)
Updated Date: Mon, 18 Sep 2023 (10:13 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிந்து 67,752 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 10 புள்ளிகள் சார்ந்து 20182 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இன்றைய விநாயகர் சதுர்த்தி நாளில் சரிந்தாலும் இனிவரும் நாட்களில் அதிகமாக உயரவே வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.