நேற்று பங்குச்சந்தை காலையில் சரிந்தாலும் மதியத்திற்கு மேல் உயர்ந்ததால் பங்குச்சந்தை உயர்வுடன் தான் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் மீண்டும் உச்சத்தை நோக்கி சென்செக்ஸ் சென்று கொண்டிருக்கிறது. இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 360 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து சென்செக்ஸ் 65,786 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 19553 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் தொடர் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது