Publish Date: Tue, 22 Aug 2023 (10:15 IST)
Updated Date: Tue, 22 Aug 2023 (10:17 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் சரிவில் இருந்த நிலையில் நேற்று முதல் நாளை பங்குச்சந்தை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்த்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 7 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 228 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 8 புள்ளிகள் உயர்ந்து 19402 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. தொடர்ச்சியாக இரண்டு நாள் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் எனவே தகுந்த ஆலோசனை பெற்று புதிதாக முதலீடு செய்பவர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது