இந்திய பங்குச் சந்தை நேற்று சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 82 புள்ளிகள் உயர்ந்து 62,707 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு நிப்டி நடித்த 35 புள்ளிகள் உயர்ந்து 18,569 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை இடையிடையே சரிந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தை உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தகுந்த ஆலோசகர் இடம் ஆலோசனை பெற்று பங்குச்சந்தையில் நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்யும் மாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பங்குச்சந்தை வருங்காலத்தில் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் ஒரு அம்சமாக இருக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்