Publish Date: Wed, 12 Apr 2023 (09:20 IST)
Updated Date: Wed, 12 Apr 2023 (09:29 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பாசிட்டிவாக தொடங்கி உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வாரம் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களுமே பெரிய அளவில் பங்குச்சந்தை உயரவில்லை என்றாலும் ஓரளவுக்கு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் சற்று முன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் இன்றும் ஏற்றமே அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சற்று முன் 30 புள்ளிகள் உயர்ந்து 60,100 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 17,741 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது