Publish Date: Fri, 16 Jun 2023 (10:48 IST)
Updated Date: Fri, 16 Jun 2023 (10:50 IST)
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஏற்கனவே 63 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் தற்போது இன்று ஒரே நாளில் 300 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக கருதப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 310 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 625 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 83 புள்ளிகள் அதிகரித்து 18,761 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை இதே சென்றால் அதில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நல்ல நிறுவனத்தின் பங்குகளில் மட்டும் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.