கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களும் பாதித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை மதிப்பு கூட்டு வரியை குறைக்க முடியாது என ஏற்கனவே தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு என மத்திய அமைச்சரும் தெரிவித்துள்ளார். எனவே இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் எண்ணம் மத்திய மாநில அரசுக்கு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.19,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.93.23-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.