கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு அரசு கால நீட்டிப்பு செய்துள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் 2021 ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதாரிடன் பான் கார்டை இணைப்பது அவசிமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது.
இதனிடையே, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு அரசு கால நீட்டிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. ஆம், அதன்படி ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.